search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியதாழை பள்ளியில்   ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    X

    பள்ளி கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டிய காட்சி.


    பெரியதாழை பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

    • கனிமொழி எம்.பி. தனதுபாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
    • அடிக்கல் நாட்டு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஊர் மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

    அதன்படி கட்டிடம் கட்டுப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    அப்போது சாத்தான்குளம் வட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தங்களை தரக்குறைவாக பேசுவதுடன், பணி நிமித்தம் தொடர்பாக டார்சர் செய்வதாகவும் அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு சரியான அதிகாரி நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தனர்.

    இதில் பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் தாசில்தார் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×