search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
    X

    செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை

    செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07695) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (07696) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சேரும்.

    இந்த ரெயில்கள் நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    Next Story
    ×