என் மலர்

  நீங்கள் தேடியது "Covid19"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
  கேப் டவுன்:

  தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

  இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

  பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்திருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். உறவினர்களை பார்ப்பதற்காகவும், தொழில்ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா வந்தவர்கள் கடைசியாக கிடைத்த விமானங்களில் நாடு திரும்ப முயன்றனர். 

  ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. 

  பின்னர் அடுத்தடுத்து பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி இரண்டு டோஸ்களும் செலுத்தியவர்கள் ஆவர்.

  தடுப்பூசி

  இதனால், மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதேசமயம் கொரோனா பரிசோததனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்றைய நிலவரப்படி 281 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதையடுத்து கல்லூரி மூடப்பட்டது. வெளியாட்கள் கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. 

  அதேபோல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய உள்நோயாளிகள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வெளியில் இருந்து மக்கள் வருவதற்கும், உள்ளே இருந்து வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மணிப்பால் மருத்துவமனையின் தலைவரும், கர்நாடகாவில் உள்ள கொரோனா தடுப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர் சுதர்சன் பல்லால் கூறுகையில், கொரோனா பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது என்றார். அதேசமயம் பாதிப்பு கடுமையாக இல்லை என்றும் அவர் கூறினார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.
  ஜோகன்னஸ்பர்க்:

  உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக  குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

  அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.

  இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

  லண்டன் விமான நிலையம்

  இந்நிலையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு இன்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது. 

  எனினும், இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.
  பெர்லின்:

  ஜெர்மனியில் கொரோனா தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. 

  தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான கட்டுப்பாடுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த விதிமுறையின்படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் சில இடங்களில் இருந்து விலக்கப்படுவார்கள்.

  கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

  ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமாக உள்ளதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார். புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

  ஜெர்மனியில் நேற்று 65,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து அதிக அளவிலான தினசரி பாதிப்பு ஆகும்.

  ×