என் மலர்
நீங்கள் தேடியது "கோவிட் பெருந்தொற்று"
- முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன.
- இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம்
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான இந்த ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன
வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது.
இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, "இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.
ஆல்பாஃபோல்ட் 3 போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், வைரஸ் எவ்வாறு செல்களுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றி, ஆராய்ச்சி வேகத்தை விரைவுபடுத்தியுள்ளன.
இந்த ஆய்வு, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
- மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது
2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.
அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.
இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.






