என் மலர்
நீங்கள் தேடியது "Corona virus"
- நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
- அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.
- பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
- கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
- தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.
- பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
- மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோரா கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேகன் என்வர் ஏற்கனவே பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
மேலும், இறந்த நபரின் மூலம் கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் தற்போது 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மக்களை அச்சமடைந்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று. இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர்.
- சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடையே புதுவிதமான தொற்றுநோய்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷியா முழுவதும் பரவி வரும் மர்ம வைரஸால் ரஷிய மருத்துவ நிபுணர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதன் அறிகுறிகள் அதிக காய்ச்சல் மற்றும் ரத்தம் கலந்த இருமல் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேல் படுக்கையில் முடங்கி விடுகின்றனர்.
இதனால் மர்ம வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், இதனை மறுத்துள்ள ரஷிய அதிகாரிகள் புதிய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட பொதுவான சுவாச நோய்த்தொற்றுகள் தான் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவர்கள் இந்த மர்ம வைரஸ் தொடர்பாக, இது சுவாசக்குழாய் தொற்று என்றும் அறிகுறிகள் மோசமடைந்தால் அவசர சிகிச்சை பெறுமாறும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சமூக வலைத்தளங்களில் மர்ம வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் ஒரே மாதிரியான அறிகுறிகளை கூறி தங்களது அனுபங்களை பகிர்ந்து வருகின்றனர்.
- சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
- தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளைவிட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைபடுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் ஜின்ஜியாங் உரும்கி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரும்கியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. அதிபர் ஜின்பிங் பதவி விலகுமாறு பொதுமக்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்தநிலையில் கொரோனா தடுப்பு மையத்துக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர். இந்த தொடர் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி உருவானது.
போராட்டம் வலுத்து வருவதால் சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 5வது பெரிய நகரமாக திகழும் குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இந்த நகரில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. காஸ்சே, செங்டு உள்பட பல இடங்களில் பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மேலும் சில நகரங்களில் பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.
- சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
பீஜிங்:
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.
2025-ம் ஆண்டுக்குள் மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவில் இருந்து வேறு இடத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
- பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- அனைத்து கொரோனா தடுப்பு மையங்களும் அங்கு மூடப்பட்டன.
பீஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால் அங்கு தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.
சீனாவில் கடைசியாக கடந்த 3-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது.
- ஜப்பான், அமெரிக்கா, சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.






