என் மலர்
இந்தியா

இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
- நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
- அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.






