என் மலர்
உலகம்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தியும் கொரோனா வைரசுக்கு முதல் பலி
- பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- அனைத்து கொரோனா தடுப்பு மையங்களும் அங்கு மூடப்பட்டன.
பீஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால் அங்கு தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.
சீனாவில் கடைசியாக கடந்த 3-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






