என் மலர்

  நீங்கள் தேடியது "in Erode district"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது.
  • இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.

  இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

  இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

  இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

  இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
  • ஈரோடு மாவட்டத்தில் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  ஈரோடு:

  தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வுகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

  இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை பிளஸ்- 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.

  இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேரும் என மொத்தம் 21, 422 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 4696 மாணவர்களும், 5839 மாணவிகள் என மொத்தம் 10,535 பேர் பிளஸ்- 2 பொது தேர்வை எழுதினர். இதில் 4158 மாணவர்களும், 5,597 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.86, மொத்த தேர்ச்சி விகிதம் 92.60 சதவீதமாகும்.

  பிளஸ் 2 பொதுத் தேர்வை 36 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 35 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

  மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போனுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது. 

  ×