search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு108 ஆம்புலன்சில் 57 பிரசவங்கள் நடந்துள்ளன
    X

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு108 ஆம்புலன்சில் 57 பிரசவங்கள் நடந்துள்ளன

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
    • கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.

    இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.

    இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

    கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது.

    Next Story
    ×