ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சரிவு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.48 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் சரிவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1205 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 500 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

இதேப்போல் மற்ற அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.48 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.59 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com