search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவு விதை, உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
    X

    ஈரோடு மாவட்டத்தில் போதுமான அளவு விதை, உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

    • ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.
    • ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் சின்னசாமி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு 1,091.04 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையிலும் நீர் இருப்பு முழு அளவில் உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் வரை, 75,745 எக்டர் பரப்பில் வேளாண் பயிர்க ளும், 45,634 எக்டர் தோட்ட க்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 42 டன், சிறுதானியங்கள், 16 டன், பயறு வகைகள், 17 டன், எண்ணை வித்துக்கள், 42 டன் இருப்பில் உள்ளன.

    ரசாயன உரங்களான யூரியா – 4,732 டன், டி.ஏ.பி., – 2,321 டன், பொட்டாஷ் – 2,437 டன், காம்ப்ளக்ஸ் – 11,624 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடு பொருட்களான விதைகள், உரங்கள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×