search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caught fire"

    • காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.

    இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.

    பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

    அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

    காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அரக்கன் கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சாமிய ப்பன் (48). இவர் சொந்தமாக ஆம்னி வைத்துள்ளார். இந்த வேனில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உள்ளது.

    இதனை சரி செய்வதற்காக கள்ளிப்பட்டி பகுதிக்கு ஆம்னி வேனை சாமியப்பன் ஓட்டி சென்றார். இதையடுத்து வேன் கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென அந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக தீ பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வேனை அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவலறி ந்து கோபி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஆம்னி வேன் முழுமையாக எரிந்தது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்னி வேனில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்தது.

    • வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 60). விவசாயி. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்க ளுக்கு செல்வகுமார், தர்ம லிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமார் கோவையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார், தர்ம லிங்கம் டிரைவராக உள்ளார். இவர்கள் அனை வரும் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி வரு கிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று செல்வகுமார் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதை யடுத்து வீட்டில் இரவு சந்திரசேகரன், குழந்தையம்மாள் தர்மலிங்கம் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது வீட்டின் கூரையில் இருந்து புகை வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் வீடு எரிந்து விட்டது. இதில் வீட்டில் வைத்து இருந்த பள்ளி சான்றிதழ்கள், மார்க் சீட், ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் கிராம நிர்வாக அலு வலர் தமிழரசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.
    • நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி அருகே பண்ணப் பட்டி மாட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவி குமார் (வயது 45). தொழி லாளி. இவர் வீட்டில் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்.

    நேற்று ரெகுலேட்டர் டியூப்பில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதனால் கியாஸ் கசிவு சமயல் அறை முழுவதும் பரவி தீப்பிடித்தது.

    இதனை கண்ட ரவிகுமார் குடும்பத்தினர் உடனடியாக காடையாம்பட்டி தீய ணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். காடை யாம்பட்டி நிலைய அலுவ லர் ராஜசேகரன் தலைமை யில் தீயணைப்புத் துறையி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இத னால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    • சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.
    • கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி மூன்றோடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி நாயக்கர். விசைத்தறி தொழில் செய்து வருகி ன்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டு களை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு கார் வந்த கொண்டிருந்த போது கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு காரின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.

    அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிதுரம் நகர்ந்து நின்றார். உடனடி யாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி நாயக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியினார்.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் ஒலகடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

    • மதுரையில் திடீரென்று வேன் தீப்பற்றி எரிந்தது.
    • அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது.

    மதுரை 

    மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார்.

    அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 3 மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தபோது அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டார். இதைத்தொடர்ந்து வேன் தீப்பற்றி எரிந்தது.

    இதுபற்றி நிஷாந்த் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வேன் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்தது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னிமலை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா (31).இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட னர்.

    அனிதாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானது. முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அவர் மூலம் அனிதாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெய க்குமார் மூலம் அனிதாவுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    ஜெயக்குமாரும், அனிதாவும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களாக சென்னிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அனிதாவின் மகள் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அனைவரும் தூங்கி விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அனிதாவின் மீது தீ பிடித்தது. இதை தொடர்ந்து முகம், சேலை யில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அனிதா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அனிதாவின் கணவர் ஜெயக்குமார் ஓடி வந்து அனிதாவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.

    இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.

    இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.

    • திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.
    • தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

    சிவகிரி, ஆக. 25-

    சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

    இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

    உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×