திடீரென தீ பிடித்து எரிந்த வேன்

திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
திடீரென தீ பிடித்து எரிந்த வேன்
Published on

சிவகிரி, ஆக. 25-

சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com