என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுத்தை"
- 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
- சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள சென்னியப்பன் காட்டு பாறை என்ற பகுதியில் 2 சிறுத்தைகள் நாயை துரத்தி கொண்டு வந்ததாகவும், பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் 2 சிறுத்தைகளும் சோளக்காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டதாகவும் திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் வனச்சரக அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் சேவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா? என்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சோளக்காட்டில் சில காலடித்தடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் திரளாக கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு இதே பகுதியின் அருகில் உள்ள பாப்பாங்குளத்தில் ஒரு சிறுத்தை இருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பெண் கூறிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
- இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,
சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரையூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது.
- சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிர மணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டால் சிறுத்தையா? அல்லது வேறு ஏதும் மிருகமா? என தெரியவரும்.
சிறுத்தை வந்திருந்தால் அதனை காட்டுப் பகுதிக் குள் விரட்ட வேண்டும் எனவும் அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதி யில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.
- கிராம மக்கள் பீதி
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளது.
இதில் முருகன் குட்டை மற்றும் கீழ் குட்டை கிராம பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் நடமாடும் இந்த சிறுத்தை தமிழக எல்லைப் பகுதிக்கு தற்போது வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கீழ் குட்டை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்துக் குதறியது. அதேபோல் நேற்று இரவும் முருகன் குட்டை பகுதியில் நுழைந்த சிறுத்தை பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை கடித்து குதறியுள்ளது.
ஆடுகளை சிறுத்தை கடித்து குதறும் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் சுற்றுவட்டார கிராம மக்களிடம் காட்டு தீப்போல் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இரவு நேரங்களில் மக்கள் வெளியே வராமல் அச்சைமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன.
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே அம்பிகாபுரம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
குன்னூர் பகுதியில் வனத்தையொட்டி அம்பிகாபுரம் கிராமம் அமைந்து உள்ளது. எனவே காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன. அப்போது அவை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அடித்து கொன்று தின்று விட்டு மீண்டும் காட்டுக்குள் தப்பி செல்கின்றன.
அம்பிகாபுரம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அம்பிகாபுரம் பகுதிக்கு நேற்று பட்டப்பகலில் ஒரு சிறுத்தை வந்தது. அது காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் முருகன் என்பவர் வீட்டுக்குள் கேட்டை தாண்டி குதித்து சென்றது. அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு வளர்ப்புநாய், சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது. எனவே அது சத்தமாக குரைத்தது.
இது சிறுத்தைக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. தொடர்ந்து வளர்ப்பு நாயை கொல்வதற்காக பாய்ந்து சென்றது. இந்த நிலையில் அந்த நாய் லாவகமாக தப்பித்து குடியிருப்பு பகுதியில் இருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. எனவே சிறுத்தைப்புலி ஏமாற்றத்துடன் மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றது.
இதற்கிடையே அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் அதிரடியாக புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு நின்ற வளர்ப்பு நாயை விரட்டி செல்வது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அம்பிகாபுரம் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், அம்பிகாபுரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனா்.
- இணையத்தில் வீடியோ வைரல்
- கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை
அரவேணு,
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது.
குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளை சேதப்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி செல்கிறது.
கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் பகுதி உள்ளது.
இந்த பகுதியில் ஆயிரக்க ணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.
இந்த சிறுத்தை வெகுநேரமாக குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வன த்திற்குள் சென்று விட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களில் பதிவாகி இருந் தது.
இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிக்குள் சிறுத்தை நடமாடியதால் அச்சத்தில் உள்ள னர்.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்று ள்ளது. இனி இது தொடர்ந்து வரலாம்.
சிறுத்தை ஊருக்குள் வந்ததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவும் தனியாக செல்லும் பயப்படுகின்றனர்
எனவே சிறுத்தையை கண்காணித்து ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்தது
- சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளது
கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் விடு திக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு இருந்த வாத்து ஒன்றை கவ்வி சென்றது.
இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில்
மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு
விட்டு ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு
கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால்
தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள்
கடும் பீதி அடைந்துள்ளனர்.
மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில்
வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகபடியாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்திற்குள் யானை, மான், சிறுத்தை, காட்டு பன்றி உள்ளிட்டவைகள் வந்து பயிர்களையும், கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். வனத்துறையினர் அவ்வாறு வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.
மாரண்டஅள்ளி அடுத்த மலைப்பகுதியை ஒட்டி சாமனூர், படகாண்டஅள்ளி, கொக்கிகல் கிராமங்கள் உள்ளது. கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கடித்து வந்தது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கொக்கிகல், சாமனூர், படகாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் நேற்று ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது, உபாதைகள் கழிப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது, கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும் என்று கூறினர்.
அதேபோல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சார வேலிகள் அமைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.
அப்போது வனத்துறையினரிடம் தெரிவித்த பொதுமக்கள் கிராமத்திற்குள் இதுவரை சிறுத்தை வரவில்லை எனவும் எந்த கால்நடைகளையும் இதுவரை சேதப்படுத்தவில்லை கிராமத்தை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது என தெரிவித்தனர்.
- ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும் என்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்ப