பண்ணாரியம்மன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பண்ணாரியம்மன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு உலகப்பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலய பகுதியில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள், யானைகள் உலாவுவது வழக்கமாக உள்ளது.

இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

இதனையடுத்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும், பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com