நண்பருடன் சென்ற சிறுவன் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து சுவரின் மீது மோதியது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பருடன் சென்ற சிறுவன் விபத்தில் பலி
Published on

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்சா புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் மதன்குமார் (வயது 16). தீபாவளி பண்டிகையையொட்டி இவர் குப்பிச்சிபுதூரை சேர்ந்த தனது நண்பர் மாதேஷ் என்பவருடன் கோட்டூர் ரோடு அய்யா மடை பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மாதேஷ் ஓட்டி வந்தார்.

மதன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து அந்த பகுதியில் இருந்த சுவரின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மதன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com