search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "died in an accident"

    • மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் உடலை மீட்டு விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று வேலை சம்பந்தமாக பைக்கில் வந்தவாசி - ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாடு ஒன்று குறுக்கே வந்தது. திடீரென அதன் மீது மோதி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார்.
    • ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 45). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக திண்டிவனம் வந்திருந்தார். விடுமுறை முடித்து இவரும், இவரது மகன் அப்துல் கலாம் ஆசாத் இருவரும் இன்று சென்னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது திண்டிவனம் தீர்த்த குளம் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் கண் முன்னே சாலை விபத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்,

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). போலீஸ்காரர்.

    இவரது மனைவி யமுனா (34). இவர்களுக்கு பிரத்தியா (8), சஞ்சனா (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சதீஷ்குமாருக்கு காலில் அடிபட்டதால் பணிக்கு வரவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உறவினர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் துரைக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதால் அதற்காக சம்பவத்தன்று காலை துரை, அவரது தாய் புஷ்பா, ஜோதிடர் மற்றும் அவரது உறவினர் வைத்தியநாதன் ஆகியோர் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.

    பின்னர் பரிகார பூஜைகள் செய்து விட்ட பின்னர் தாயையும், ஜோதிடரையும் பஸ் ஏற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரை ஓட்ட அவரது உறவினர் வைத்தி யநாதன் (31) பின்னால் அமர்ந்து கொண்டு பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    சுமார் 12 மணியளவில் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்துள்ள மீன் பண்ணை அருகே சென்றபோது துரை அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த வைத்தியநாதன் லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே துைர இறந்து விட்டதாக தெவித்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருமணத்திற்காக பரிகாரம் செய்ய சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டை கழட்டி யதால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது

    தேவதானப்பட்டி:

    உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் மேலசிந்தலைச்சேரியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 32). இவர் கொடைக்கானல் தோட்ட க்கலைத்துறையில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வத்தலக்குண்டு - பெரியகுளம் சாலையில் வந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து சுவரின் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்சா புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் மதன்குமார் (வயது 16). தீபாவளி பண்டிகையையொட்டி இவர் குப்பிச்சிபுதூரை சேர்ந்த தனது நண்பர் மாதேஷ் என்பவருடன் கோட்டூர் ரோடு அய்யா மடை பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மாதேஷ் ஓட்டி வந்தார்.

    மதன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து அந்த பகுதியில் இருந்த சுவரின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மதன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
    • சிகிச்சை பலனளிக்காமல் சரோஜா பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் அங்கண்ணன் நகரை சேர்ந்தவர் லோக சண்முகம். இவரது மனைவி சரோஜா தேவி (வயது 53).

    சம்பவத்தன்று இவர் தனது மகன் வெங்கட் பிரவு என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை- சிறுவாணி மெயின் ரோட்டில் ஆண்டிப்பாயைம் சந்திப்பில் சென்ற போது ரோட்டின் நடுவே இருந்த வேகதடையை வெங்கட் பிரவு கவனிக்காமல் சென்றார். அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

    இதில் சரோஜா தேவி தலை மற்றும் உடலில் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரோஜா தேவியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக ்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள் ளாச்சி ராமு அவென் யூவை சேர்ந்த வர் சதீஷ் (32). சமையல் தொழி லாளி. சம்பவத ்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டு ப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×