தேவதானப்பட்டியில் பைக்கில் சென்ற அரசு அதிகாரி விபத்தில் பலி

திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் மேலசிந்தலைச்சேரியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 32). இவர் கொடைக்கானல் தோட்ட க்கலைத்துறையில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல்லில் அலுவலக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

வத்தலக்குண்டு - பெரியகுளம் சாலையில் வந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com