search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager who"

    • மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
    • கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்து க்கொண்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை-ஈரோடு சாலையில் மார்க்கெட் அருகே போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டி ருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மேல் திண்டல், அருள் நகரை சேர்ந்த விஷால் (21) என்பதும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்துக்கொண்டார்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 550 கிராம் கஞ்சாத்தூள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5,500 இருக்கும். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சா தூள்கள், ரூ.1,600 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெருந்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து சோதனை செய்ததில் 450 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4,500 இருக்கும்.

    விசாரணையில் அவர் கீழ் திண்டல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (20) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேசை கைது செய்தனர். அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதானவர்களிடம் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் துரைக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதால் அதற்காக சம்பவத்தன்று காலை துரை, அவரது தாய் புஷ்பா, ஜோதிடர் மற்றும் அவரது உறவினர் வைத்தியநாதன் ஆகியோர் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.

    பின்னர் பரிகார பூஜைகள் செய்து விட்ட பின்னர் தாயையும், ஜோதிடரையும் பஸ் ஏற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரை ஓட்ட அவரது உறவினர் வைத்தி யநாதன் (31) பின்னால் அமர்ந்து கொண்டு பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    சுமார் 12 மணியளவில் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்துள்ள மீன் பண்ணை அருகே சென்றபோது துரை அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த வைத்தியநாதன் லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே துைர இறந்து விட்டதாக தெவித்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருமணத்திற்காக பரிகாரம் செய்ய சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டை கழட்டி யதால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

     பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பவானி-அந்தியூர் மெயின் ரோடு நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பவானி மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தாண்டான் (46) என்பதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×