search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people including"

    • மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
    • கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்து க்கொண்டார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை-ஈரோடு சாலையில் மார்க்கெட் அருகே போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டி ருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மேல் திண்டல், அருள் நகரை சேர்ந்த விஷால் (21) என்பதும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததையும் ஒத்துக்கொண்டார்.

    மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 550 கிராம் கஞ்சாத்தூள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5,500 இருக்கும். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சா தூள்கள், ரூ.1,600 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெருந்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து சோதனை செய்ததில் 450 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4,500 இருக்கும்.

    விசாரணையில் அவர் கீழ் திண்டல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (20) என தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேசை கைது செய்தனர். அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதானவர்களிடம் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×