என் மலர்
நீங்கள் தேடியது "lorry car crash"
- விபத்தில் கார் உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கியதால், உள்ளே இருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்கு டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
சென்னை மண்ணடி கோதல் மெர்சாட் தெருவை சேர்ந்த ஜாவித், பைசல், ரைஸ் ஆகியோர் தங்களது உறவினர்கள் 6 பேருடன் இன்று அதிகாலை காரில் ஏலகிரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை பைசல் ஓட்டிச் சென்றார்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே சின்னப்பன்சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதனால் கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்து சென்றது.
அப்போது எதிரே வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆசிப், யாகூப், இம்தியாஸ், முகமது யாசிப், இன்ஷார் இர்பான், இன்ஷா ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த 6 வாலிபர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வேப்பனஹள்ளி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆஸ்டீன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது உறவினர் வசந்தகுமார். இவர்கள் 2 பேரும் தங்களது, உறவினர்களான மேரிவைலட்(65), டாரஸ் (48), ஏஞ்சல் (18), அனிதா (18) உள்பட 9 பேருடன் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு பிரார்த்தனை முடித்து விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது காரை வசந்தகுமார் ஓட்டி சென்றார். காரை நாகமங்கலத்தில் இருந்து கெலமங்கலம் வழியாக செல்லாமல் சூளகிரி வழியாக தவறுதலாக சென்று விட்டனர்.
சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒரு யு வடிவ வளைவில் ஒசூரில் இருந்து ஒரு லாரி திரும்பியது.
இதனை சற்று எதிர்பாராத வசந்தகுமார் காரை வேகமாக சென்று லாரி நடுவில் மோதி விட்டார்.
இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த மேரி வைலட், அனிதா, ஏஞ்சல் ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் டாரஸ், ராஜன், காரை ஓட்டி வந்த வசந்தகுமார், அவரது 6 மாத ஆண் குழந்தை உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சூளகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் டாரஸ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டிவனம்:
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவர் சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அந்த நிறுவனத்தில் ஜான்சாமுவேல் (29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு இவர்கள் 2 பேரும் குடும்பத்துடன் ஊட்டி செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), 8 மாத பெண் குழந்தை நானி மற்றும் விஜயகுமாரின் அத்தை ராமலட்சுமி (45), ஜான்சாமுவேல், அவரது மனைவி வின்சி (24) ஆகிய 6 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர்.
அங்கு அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னைக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த கார் இன்று அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ஜான்சாமுவேல், வின்சி, 8 மாத குழந்தை நானி, கார் டிரைவர் அருண் ஆகிய 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நட ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் கடலூருக்கும் சேந்தனேந்தலுக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையிலிருந்து கீழக்கரை நோக்கி வந்த கார் லாரியின் பின்புறமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி சாந்தி (வயது35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாந்தியின் தந்தை முத்து ராமலிங்கம் (70), சித்தப்பா ராமச்சந்திரன் (60), உறவினர் முனித்துரை (53) மற்றும் கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் கிராமம் கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களது மகள் தனுஸ்ரீ (3).
இந்த நிலையில் சரண்யாவின் சகோதரி இறந்து விட்டார். இதனால் அவரது மகள்களான சாய்வர்சினி (10), ஸ்ரீவர்சினி (8), என்ற 2 குழந்தைகளையும் சரண்யாவின் தந்தை தட்சிணா மூர்த்தி வளர்ந்து வந்தார்.
விஜயகுமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார். விஜயகுமாரின் மாமனார் தட்சிணா மூர்த்தி (55), மாமியார் உமாராணி (50) ஆகியோரும் உடன் சென்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு நேற்று இரவு அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (27) என்பவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தஞ்சை- திருச்சி புறவழிச்சாலை அருகே உள்ள கிரீன் சிட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரோட்டோரத்தில் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்ற லாரி மீது ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த விஜயகுமார், அவரது மனைவி சரண்யா, மற்றும் மாமனார் தட்சிணா மூர்த்தி, சிறுமி தனுஸ்ரீ, டிரைவர் அரவிந்த் ஆகிய 5 பேரும் இடி பாடுகளில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் காரில் இருந்த உமாராணி, சிறுமிகள் சாய்வர்சினி, ஸ்ரீவர்சினி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் பலியான சம்பவம் புதுப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TamilNews






