என் மலர்tooltip icon

    இந்தியா

    போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது -  நிதின் கட்காரி
    X

    போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது - நிதின் கட்காரி

    • பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
    • இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து திட்டங்கள், சாலை போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மர வங்கி, செல்போன் அடிப்படையிலான டிரைவிங் பயிற்சி, 11 முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் நெகிழ்வுத்தன்மை கொண்ட எந்திரங்கள் என இந்தியாவின் போக்குவரத்து துறை மிகப்பெரிய மாற்றம் பெற்று வருகிறது.

    மேலும் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை 4 வழிச்சாலையாக மாற்றுதல், முக்கிய வழித்தடங்களில் அதிவேக மின்சார போக்குவரத்து நெட்வொர்க் நிறுவுதல் மற்றும் சாலை கட்டுமானத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீ ஆக உயர்த்துதல் போன்ற திட்டங்களும் உள்ளன.

    நாங்கள் புதுமைகளை முன்னெடுத்துச்செல்கிறோம். போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பயணிக்கும் விதத்தை மாற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

    பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. கேதார்நாத் உட்பட 360 இடங்களில் ரோப் கார்கள், கேபிள் பஸ்கள் மற்றும் பனிகுலர் ரெயில் திட்டங்களை நாங்கள் அமைத்து வருகிறோம். இவற்றில் 60 திட்டங்களில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்களுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இவற்றின் பணிகள் முடிவடைந்தால் இந்தியாவின் முகத்தையே அது மாற்றும்.

    மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தியாக இருப்பது மட்டுமின்றி, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும்.

    இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன். பெருநகரங்களில் கேபிள் மூலம் இயங்கும் பஸ்கள், விமானம் போன்ற வசதிகளுடன் கூடிய மின்சார விரைவுப் போக்குவரத்து பஸ்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மெட்ரினோ பாட் டாக்சிகள், ஹைப்பர்லூப் அமைப்புகள் மற்றும் தூண் அடிப்படையிலான வெகுஜன விரைவான போக்குவரத்து போன்ற அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்கள் தயாராக உள்ளன.

    தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரும் வருகிறார்கள். இது ஒரு புரட்சியாக இருக்கும். டாடா, டயோட்டா, ஹூண்டாய், மகிந்திரா உள்பட 11 நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நெகிழ்வான எரிபொருள் எந்திர வாகனங்களை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.

    2013-14-ல் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 60 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கி.மீ.யாக உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    Next Story
    ×