என் மலர்
இந்தியா

ஓய்வு முடிவு? கவனம் ஈர்க்கும் நிதின் கட்கரியின் பேச்சு!
- வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
- நிதின் கட்கரிக்கு தற்போது 68 வயதாகிறது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ள விதர்பாவில் 'அட்வான்டேஜ் விதர்பா-காஸ்தர் ஆத்யோகிக் மஹோத்சவம்' என்ற முதலீட்டு மாநாடு மற்றும் வணிக விழா பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"தலைமுறை மாற்றமும் படிப்படியாக நிகழ வேண்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் படிப்படியாக ஓய்வுபெறச் செய்யப்பட்டு, புதிய தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். வண்டி சீராக ஓடத் தொடங்கியதும், நாம் அதிலிருந்து விலகி மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வின் நோக்கம், விதர்பாவை இந்தியாவின் தொழில்துறை வரைபடத்தில் வலுவான மற்றும் வளர்ந்து வரும் வளர்ச்சி மையமாக நிலைநிறுத்துவதாகும்" என தெரிவித்தார். மேலும் எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் தொழில்துறை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் சேவைத் துறையின் முக்கியத்துவத்தையும் கட்கரி வலியுறுத்தினார். ஓய்வு குறித்த நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.






