search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retire"

    தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். #IGPonManickavel #PonManickavel
    சென்னை:

    போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிந்தன. அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார். அவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    அதே நேரத்தில் தமிழக அரசு, சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அவர் அரசிடம் சரியாக தெரிவிப்பது இல்லை என்று குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அவர் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார்.

    இருப்பினும் கோர்ட்டு தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. இதனால் 2 பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

    தமிழக போலீசில் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதிலும் திறமையாக செயல்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.


    டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவு பிரிவிலும் பணியாற்றியுள்ளார். சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையராகவும் இருந்துள்ளார். தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது நாளை தெரியும்.

    இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    ரெயில்வேயில் வழிப்பறியில் ஈடுபட்டால் 14 ஆண்டு வரையில் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. சாட்சிகள் இல்லாத நிலையில் குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் வாங்கினாலே செல்லுபடியாகும், அதனை யாரும் செய்வது இல்லை. கீழ்நிலை காவலர்களுக்கு அது சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

    குற்றவாளிகளுக்கு எதிராக 9 எம்.எம். துப்பாக்கியை காட்டுவதை விட போலீசார் தங்களது செல்போனில் அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்வது நல்லது. நல்லது, கெட்டது இரண்டையும் ஏற்கும் மனநிலைக்கு போலீசார் வரவேண்டும். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்.ஐ.ஆர். போடுவதற்கு பயப்படக் கூடாது.

    இவ்வாறு பொன் மாணிக்கவேல் பேசினார். #IGPonManickavel #PonManickavel
    டோனியை ஓய்வு பெறுமாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். #ShahidAfridi #MSDhoni
    புதுடெல்லி:

    இந்திய அணிக்கு இரண்டு உலககோப்பையை பெற்று கொடுத்து பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    37 வயதான டோனி 2014-ம் ஆண்டு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20ஓவர் ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு நிலைகளிலும் ஆடி வந்தார்.

    இதற்கிடையே 20 போட்டிக்கான அணியில் இருந்து ஓய்வு பெற்ற பெயரில் டோனி கழற்றி விடப்பட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கப்பட்ட அவர் இனி எதிர்காலத்தில் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இடம் பெறுவது சந்தேகமே.

    தற்போது மோசமான நிலையில் டோனியின் பேட்டிங் இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பை போட்டி (50 ஓவர்) வரை அவர் இந்திய அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி வரக்கூடிய ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒய்வுக்கான நெருக்கடியில் அவர் இருக்கிறார்.

    இந்த நிலையில் டோனியை ஓய்வு பெறுமாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.



    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக டோனி என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதனைகளை புரிந்தவர். இதனால் டோனி ஓய்வு பெற வேண்டும் என்று அவரிடம் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

    2019 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் தேவை. அப்போது தான் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்.



    எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். அவரது ஆட்டம் எனக்கு பிடிக்கும். ஆனாலும் கேப்டன் பதவியில் அவர் இன்னும் நிறைய முன்னேற வேண்டும். என்னை பொறுத்தவரையில் கேப்டன் பதவியில் டோனி தான் சிறந்தவர்.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தொடர் அற்புதமாக இருக்கும். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியா முயற்சி செய்யும். இந்திய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அப்ரிடி கூறி உள்ளார். #ShahidAfridi #MSDhoni
    அயர்லாந்து இரட்டை சகோதரிகள் சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். #ICCWomensWorldT20 #Ireland
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்த திருப்தியுடன் வெளியேறியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நியூசிலாந்து அணி 7.3 ஓவர்களில் எட்டியது. இந்த ஆட்டத்துடன் அயர்லாந்து இரட்டை சகோதரிகள் 35 வயதான சிசிலியா ஜாய்ஸ், இசோபெல் ஜாய்ஸ் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

    தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன்னில் கேட்ச் ஆன சிசிலியா மொத்தத்தில் 43 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 659 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல் ரன் ஏதுமின்றி வீழ்ந்த இசோபெல் 55 ஆட்டங்களில் ஆடி 944 ரன்கள் சேர்த்து இருக்கிறார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த ஒரே அயர்லாந்து வீராங்கனையான 37 வயதான கிளார் ஷில்லிங்டன், சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான சியாரா மெட்கால்ப் ஆகியோரும் இதுவே தங்களது கடைசி சர்வதேச போட்டி என்று ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. #ICCWomensWorldT20 #Ireland
    பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #Pakistan #NaveedMukhtar
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ராணுவ தளபதி பதவிக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிக்க பதவி, உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைவர் பதவி ஆகும். இந்தப் பதவியில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி முதல் இருந்து வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் இன்று (திங்கட்கிழமை) ஓய்வு பெறுகிறார்.

    இவர் 35-ம் ஆண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி இருக்கிறார்.

    தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நவீத் முக்தாருடன் இன்று 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் பெஷாவர் படைப்பிரிவின் தளபதி நாசர் அகமது பட், ராணுவ வியூக கட்டளை பிரிவின் தளபதி மியான் முகமது ஹிலால் உசேன், ராணுவ தலைமையகத்தின் செயலாளர் காயூர் மெக்மூது, தலைமையக பயிற்சி பிரிவு ஐ.ஜி. ஹிதாயத்தூர் ரகுமான் ஆகியோர் ஆவார்கள்.  #Pakistan #NaveedMukhtar 
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்த அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார். #Justice #AnthonyKennedy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வருபவர் அந்தோணி கென்னடி (வயது 81). இவர் அடுத்தமாதம் (ஜூலை) 31-ந் தேதி, தான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் ஜனாதிபதி டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து தன்னுடைய முடிவை தெரிவித்தார். அந்தோணி கென்னடி ஓய்வு பெறுவதையடுத்து, அவருடைய இடத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கும் பணியில் டிரம்ப் தீவிரமாக இறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, 25 நீதிபதிகளின் பெயர்களை டிரம்ப் பட்டியலிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் பெயரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    அமுல் தாபர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் 6-வது மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியாக டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர் ஆவார். அதன் மூலம் அமெரிக்காவில் மேல்முறையீட்டு கோர்ட்டின் நீதிபதியான முதல் தெற்கு ஆசிய வம்சாவளி என்கிற பெயரை அவர் பெற்றார்.

    இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான அமுல் தாபர், 1991-ம் ஆண்டு பாஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த ஆண்டு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த நீதிபதி பதவிக்கு அமுல் தாபர் பெயர் பரிசீலிக்கப்பட்டதும், இதற்காக டிரம்ப் அவரிடம் நேர்காணல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  #Justice #AnthonyKennedy #tamilnews
    ×