என் மலர்
நீங்கள் தேடியது "ISI Chief General"
பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #Pakistan #NaveedMukhtar
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ராணுவ தளபதி பதவிக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிக்க பதவி, உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைவர் பதவி ஆகும். இந்தப் பதவியில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி முதல் இருந்து வருபவர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் இன்று (திங்கட்கிழமை) ஓய்வு பெறுகிறார்.
இவர் 35-ம் ஆண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவீத் முக்தாருடன் இன்று 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் பெஷாவர் படைப்பிரிவின் தளபதி நாசர் அகமது பட், ராணுவ வியூக கட்டளை பிரிவின் தளபதி மியான் முகமது ஹிலால் உசேன், ராணுவ தலைமையகத்தின் செயலாளர் காயூர் மெக்மூது, தலைமையக பயிற்சி பிரிவு ஐ.ஜி. ஹிதாயத்தூர் ரகுமான் ஆகியோர் ஆவார்கள். #Pakistan #NaveedMukhtar