என் மலர்
நீங்கள் தேடியது "தொற்று"
- மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
- டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன
டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.
புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,
"கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.






