search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurumpur"

    • மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் பஞ்சாயத்து மயிலோடை பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளநீர் இந்த பாலத்தை மூழ்கடித்து செல்வதால் இதில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து மயிலோடையில் புதிய பாலம் கட்ட ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த பாலம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தொடக்கி வைத்தார்.

    இதில் யூனியன் சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், என்ஜினீயர் வெள்ளப்பாண்டியன், பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள், கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான குழுவினர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.
    • அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச் சாமி தலைமையி லான குழுவினர் குரும்பூர் ெரயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.

    அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் குற்றம் சாட்டப் பட்டவர், குரும்பூர் மற்றும் நாலுமாவடி பகுதிகளில் இருந்து, கால்நடை தீவனத் தில் லாப நோக்கத்திற்காக ரேஷன் அரிசியை சேகரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக கருங்குளம் மதன் கோவில் தெருவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் வெங்கடேஷ் (23) என்பவரை கைது செய்தனர்

    • குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர்.

    குரும்பூர்:

    குரும்பூர் புனித கன்பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கடந்த 4-ந்தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டவர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார் மற்றும் மறைமாவட்ட பங்குத்தந்தை பபிஸ்டன் குருக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12-ந்தேதி மாலையில் திருவிழா ஆராதனையும், அதனைத்தொடர்ந்து புனித கன்பிரகாசியம்மாள் தேர்பவனியும் நடந்தது.

    இதில் ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், அ.தி.மு.க. ஆழ்வை ஒன்றிய கிழக்கு செயலாளர் விஜயக்குமார், அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பரதர் ஊர்நலக்கமிட்டி தலைவர் சிலுவை அந்தோணி சவரிமுத்து மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் ஆலய திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபிஸ்டன் மற்றும் குரும்பூர் பரதர் ஊர்நலகமிட்டியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.

    நாசரேத்:

    குரும்பூர் அருகே உள்ள நாலுமா வடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. நாளை (10-ந் தேதி)வரை நடைபெறுகிறது.

    4-வது நாளன்று அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.

    அப்போது முகாம் பொறுப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் எட்வின் தி.மு.க. மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன், ஆகியோர் உடனிருந்தனர்.

    ×