என் மலர்

  நீங்கள் தேடியது "New Bus Stand"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
  • மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

  மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.

  இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
  தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

  புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

  இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

  இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்
  • நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது

  நெல்லை:

  நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை முதல் இரவு வரை உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்.

  உடன்குடி பஸ்

  இதன் மூலம் தொழில் நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு வருவதற்காகவும் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக நெல்லையில் இருந்து உடன்குடிக்கு செல்லும் பஸ்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

  இதற்கு முன்பு காலை 11.50 மணி, மதியம் 12.30 மணி, 1.15 மணி அதனை தொடர்ந்து 2.30 மணிகளில் உடன்குடிக்கு பஸ் இயக்கப்படும். இந்த பஸ் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக உடன்குடி செல்வதால் அந்த வழிகளில் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.

  பயணிகள் புகார்

  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 11.50 மணிக்கு இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு விடுகிறது.தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது பயணிகள் 12.30 மணிக்கு இயக்கப்படும் பஸ்சை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் சில நாட்களாக அந்த பஸ்சும் மாயமாகி விட்டதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

  நேற்றும் அந்த பஸ் வராததால், அந்த நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்கள் அடிக்கடி மாயமாவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து மாற்று பஸ் வசதி கேட்டாலும், அவர்கள் செய்து கொடுப்பதில்லை என்றும், பயணிகள் பரிதவிக்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இருந்துள்ளது.

  தற்போது தமிழக அரசு நிறைவேற்றும் வகையில் சங்கரன்கோவிலில் மையப்பகுதியில் இயங்கி வந்த பழைய அண்ணா பஸ் நிலையம் கட்டிட உறுதி தன்மையை இழந்ததை அடுத்து அதனை இடித்து தற்போது அங்கு சுமார் ரூ. 9 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

  நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி பொறியாளர் ஹரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தொடர்ந்து புதிய பஸ் நிலைய பணிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, மாவட்ட இளைஞரணி சரவணன், தொமுச நெல்சன், அரசு வழக்கறிஞர்கள் கண்ணன், ஜெயக்குமார், அரசு ஒப்பந்ததாரர்கள் மாரியப்பன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
  • மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

  உடுமலை :

  உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

  மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது.
  • பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

  நெல்லை:

  பாளை கக்கன்நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

  ரூ. 1 லட்சம்

  நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது. அதனை சண்முகசுந்தரம் எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அவர் மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பணம் யாருக்கு சொந்தமானது? பணத்தை காணவில்லை என யாரேனும் புகார் செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பாராட்டு

  இந்நிலையில் பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூரில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  கரூர்:

  கரூர் மாவட்ட தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலய கூட்டரங்கில் நடந்தது-. மாவட்ட அவை தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

  வாங்கல் - மோகனூர் உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் மின்இணைப்பு கொடுக்கப்படாததால் இருள் சூழ்ந்தபடி இருக்கிறது. எனவே அங்கு மின்விளக்குகள் எரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வாங்கல் அல்லது தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கரூருக்கு புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் பஸ் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும்.

  மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற கருத்தினை முன்வைத்து அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம். ரகுநாதன், ஆர்.கந்தசாமி, எம்.எஸ்.மணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
  புதுச்சேரி:

  புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழு சார்பில் கொக்கு பார்க் அரசு அச்சகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் தென்னரசன், லோகு, ரவிச் சந்திரன், வெங்கடேசன், சிலம்பரசன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வீட்டு வரி சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தொகுதியில் எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும். சாலை வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரவேண்டும்.

  பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் சட்டமன்றத்தில் அறிவித்தபடி கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே மாடி பஸ் நிலையத்தை அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இதையொட்டி பஸ்களை இயக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
  சென்னை:

  சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்தளம், மேள்தளத்துடன் மாடி பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தார்.  இதையடுத்து பஸ்நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

  தற்போது மாடி பஸ் நிலைய கட்டிடம், டிரைவர்கள்-கண்டக்டர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

  கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தனித்தனியாக நிறுத்துவதற்கு பார்கிங் வசதி, இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

  பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று 2 பஸ்கள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்துக்கும், அங்கிருந்து கீழ் தளத்துக்கும் வளைவுகள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.

  இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் இருந்து காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

  எனவே பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் 50 பஸ்களும், கீழ் தளத்தில் 42 வெளியூர் பஸ்களும்(ஆந்திரா மார்க்கம்), 9 மாநகர பஸ்களும் நிறுத்த கூடிய வகையில் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது.

  தற்போது 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் (ஜூலை) பஸ்நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் புதிய பஸ்நிலையத்தை திறந்து வைப்பார். இந்த பஸ்நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெரிமினல்’ (நகரத்தின் உள்ளே, வெளியே செல்லும் பஸ் முனையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சி.எம்.டி.ஏ. நிர்வாகம் கோயம்பேடு பஸ் நிலையத்தை போன்றே மாதவரம் பஸ்நிலையத்தையும் நவீன முறையில் அமைத்துள்ளது. எனவே மாடி பஸ் நிலையம் மாதவரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. 
  ×