search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட திட்டம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட திட்டம்

    • வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
    • 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது :- மாவட்ட திட்டக்குழு அமைக்க மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் தேர்வு செய்யப்படுவர். தனியாக கூடி விவாதித்து, கவுன்சிலர்களில் இருந்து 8 பேர் உறுப்பினராக தேர்வு செய்யலாம். குறிப்பாக மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் அதிகம் பங்கேற்ற கவுன்சிலர்களை தேர்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.

    கடந்த கூட்டத்தில் வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை. விரைவாக பணியை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அடுத்த நிதி வரும் போதும் வார்டுக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு ஒதுக்கப்படும்.

    கவுன்சிலர்கள் குறித்த அவகாசத்துக்குள் பணி பரிந்துரையை வழங்காவிட்டால் கவுன்சிலர் பணியை வழங்கவில்லை என்று பதிவு செய்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு ஒதுக்கிய நிதியில் பணியை துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் முன்மொழிந்தார். நம் மாவட்டத்தை சேர்ந்த முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெயரை புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென மாவட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் பரிந்து ரைக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் அறிவித்தார்.

    Next Story
    ×