search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dheeran Chinnamalai"

    • தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
    • தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.

    1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

    தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு.

    வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார். தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியவர் வீரன் சின்னமலை. இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம்பெற்ற தீரன் சின்னமலையின் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை.
    • தீரன் சின்னமலை நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தலைமை கழக செயலாளர் பெஸ்ட் சந்திரசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் கேபிள் தங்கராஜ். மாநகர மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட பொருளாளர் நாராயணசாமி,மண்டல நிர்வாகிகள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், குணசேகரன், ஆட்டோ நாகராஜ், மோகன், செல்வக்குமார் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
    • 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது :- மாவட்ட திட்டக்குழு அமைக்க மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் தேர்வு செய்யப்படுவர். தனியாக கூடி விவாதித்து, கவுன்சிலர்களில் இருந்து 8 பேர் உறுப்பினராக தேர்வு செய்யலாம். குறிப்பாக மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் அதிகம் பங்கேற்ற கவுன்சிலர்களை தேர்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.

    கடந்த கூட்டத்தில் வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை. விரைவாக பணியை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அடுத்த நிதி வரும் போதும் வார்டுக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு ஒதுக்கப்படும்.

    கவுன்சிலர்கள் குறித்த அவகாசத்துக்குள் பணி பரிந்துரையை வழங்காவிட்டால் கவுன்சிலர் பணியை வழங்கவில்லை என்று பதிவு செய்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு ஒதுக்கிய நிதியில் பணியை துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் முன்மொழிந்தார். நம் மாவட்டத்தை சேர்ந்த முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெயரை புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென மாவட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் பரிந்து ரைக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் அறிவித்தார்.

    • கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

     திருப்பூர் :

    கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை கதிர்வேல் தலைமை தாங்கினார்.மாநகர பொருளாளர் மூர்த்தி, மாநில துணைச் பொதுச்செயலாளர் கே.கே. ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் கொங்கு சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுகோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு திருப்பூர் மாநகரத்தில் சிலை அமைக்க வேண்டும், கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகியும் காந்தியவாதியுமான கோவை கதர் அய்யா முத்து கவுண்டருக்கு திருப்பூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதேபோல் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரத்திற்காக போராடிய தியாகி வீரபாண்டி சுந்தரம்மாளின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் குணா ,காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவநாதன் ,நகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாள் நிகழ்ச்சி.

    பல்லடம் :

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 217வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்,பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவை தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், பூபதி, நகர தலைவர் ஆறுக்குட்டி,நகர செயலாளர் வெங்கடேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி,மற்றும் மாணவரணி, இளைஞரணி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பல்லடம் கடைவீதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் சிட்டிசன் ஈஸ்வரன், நகரத் தலைவர் வடிவேலன், மூத்த நிர்வாகி ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தீரன் சின்னமலை லட்சியத்துக்காக திமுக குரல் கொடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #DMK #MKStalin

    சென்னை:

    தீரன் சின்னமலையின் 213-வது நினைவு தினத்தை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர், அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213-வது நினைவு நாள் இன்று. வருடந்தோறும் அவரை போற்றுகின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன்னுடைய மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய மரியாதையை நாங்கள் செலுத்தி இருக்கிறோம்.

    கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய மக்களுக்காக மட்டுமல்லாமல், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்காகவும், ஏன் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை.

    எனவே, அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருந்த கலைஞர், கிண்டியில் அவருக்கு சிலை அமைத்துத்தந்தார்.

    அதுமட்டுமல்லாமல், மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இடம் பெற்றிருந்தபொழுது அவருக்கு அஞ்சல்தலை வெளியிடக் கூடிய வாய்ப்பையும் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

    எனவே, தீரன் சின்னமலையின் 213-வது நினைவு நாளில் அவர் எந்த கொள்கைக்காக, எந்த லட்சியத்திற்காக வாழ்ந் திருக்கிறாரோ அதனை நிறைவேற்ற, எல்லா நிலையிலும் கலைஞர் காட்டக்கூடிய வழியில் நின்று, திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும், பாடுபடும், பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×