பல்லடத்தில் தீரன் சின்னமலை நினைவுநாள் நிகழ்ச்சி

பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாள் நிகழ்ச்சி.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 217வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்,பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவை தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், பூபதி, நகர தலைவர் ஆறுக்குட்டி,நகர செயலாளர் வெங்கடேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி,மற்றும் மாணவரணி, இளைஞரணி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பல்லடம் கடைவீதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் சிட்டிசன் ஈஸ்வரன், நகரத் தலைவர் வடிவேலன், மூத்த நிர்வாகி ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com