தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை:

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாவீரன் தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீரன் சின்னமலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com