என் மலர்
நீங்கள் தேடியது "புதிய பேருந்து நிலையம்"
- பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
- பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
- 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில், நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.
புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
- மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
- மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
உடுமலை :
உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.






