search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"

    மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வரு கிறார். இளம்பெண்ணுக்கு கேரள மாநிலம் கோழிக்கோ ட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இளம்பெண் அவரது மகளுடன் வாடகை வீட்டில் கள்ளக்காதலனுடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் இரவு முழுவதும் ஜாலியாக இருந்தார்.

    மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய காதலனுக்கு அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காதலன், இளம்பெண் கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்ய முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப்ப ரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத்தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்த நாயக்கனூர், அங்க லக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக்கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோள பாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலை யாண்டிபட்டிணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம்பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப்பிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நேற்று பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நடக்கும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    மாவட்ட கலெக்டருடன் ஆய்வின்போது வடடார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வந்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி மாகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). கூலித் தொழிலாளி.

    இவருக்கு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதன் காரணமாக ரஞ்சித்குமார் கடந்த சில வருடங்களாக அந்த பகுதி யில் தனியாக வசித்து வந்தார்.

    இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த கோபாலகி ருஷ்ணன் (38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவி ல்லை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித்கு மாருக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்தார்.

    வார விடுமுறை நாட்களில் இவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாரின் வீட்டில் வைத்து ஒன்றாக மது குடிப்பதும், ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதும் வழக்கம்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ரஞ்சித்குமார் மது வாங்கி கொண்டு, கோபால்கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.

    அப்போது ரஞ்சித்குமார், கோபாலகிருஷ்ணனின் தாய் பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவ ரையொருவர் சரமாரி யாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

    தனது தாயை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், வீட்டின் முன்பு கிடந்த கல்லை எடுத்து கொண்டு உள்ளே சென்று, ரஞ்சித்குமாரை தாக்கினார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமார் ரத்த வெள்ள த்தில் மயங்கி கீழே விழு ந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத கோபால கிருஷ்ணன் கல்லால் ரஞ்சித்குமாரின் முகத்திலும் சரமாரியாக தாக்கினார்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்குமார் இறந்து விட்டதால் அதிர்ச்சியான கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் தனது உறவினர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்ப வங்களை தெரிவி த்தார். அவர் உடனடியாக கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ரஞ்சித்கு மாரின் உடலை பார்வை யிட்டு, விசாரணை மேற்கொ ண்டனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொல்ல ப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அந்த பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே விரைந்து சென்று போலீசார் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தனது தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்து கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகி றார்கள்.மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார்.
    • போலீசார் புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை

    ேகாவை அங்காளகுறிச்சி என்.ஜி.கே.நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று பஸ்சை ஆர்.எம்.புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் கோட்டூர் பஞ்சாயத்து அலுவலம் வீதி அருகே சென்றபோது சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார். அதனை பார்த்த பஸ் டிரைவர் ஜெகநாதன் அந்த வாலிபரிடம் ஓரமாக நில்லுங்கள். சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கிறது என அறிவுரை கூறினார்.

    இதனால் அந்த வாலிபர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் சாைலயில் இருந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் உடனே கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கோட்டூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (38) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அரசு பஸ் டிரைவர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    பொள்ளாச்சி:

    வனத்துறை சார்பில் தேக்கு, ஈட்டி, சவுக்கு, செம்மரம், நாவல் மற்றும் பல்வேறு வகையான நாற்றுக்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நாற்றுக்களை விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் வீடுகளில் வளர்க்க விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் சென்று விண்ணப்பித்தால் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வரும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் நாற்றுகள் நடவு செய்ய விரும்பினால் அந்த இடத்தின் சிட்டா, கல்வி நிறுவனங்களின் லெட்டர் பேடில் கோரிக்கை கடிதம், உரிமையாளர் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    தன்னார்வலர்கள் என்றால் பொது இடங்களில் நடவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் ஊராட்சி தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களின் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் 9791661116 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×