பொள்ளாச்சி அருகே மாணவர் தற்கொலை முயற்சி

14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.
பொள்ளாச்சி அருகே மாணவர் தற்கொலை முயற்சி
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com