என் மலர்
நீங்கள் தேடியது "udhayanithi stalin"
- இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி.
- தற்போது கொண்டுவரப்பட்ட அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான்.
திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
'இந்த மகளிர் மாநாடு கூட்டத்தைப் பார்த்தால் அடுத்த 10 நாட்களுக்கு சங்கி கூட்டமும், அடிமைக் கூட்டமும் தூங்கமாட்டார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மகளிரின் குரலாக முதலமைச்சரின் குரல் உள்ளது. மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என வந்தால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட தமிழ்நாடு முதலமைச்சர் பெயர்தான் நியாபகம் வரும்.1924ஆம் ஆண்டு போராட்டத்தின்போது பெரியார் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த போராட்டத்தை கையிலெடுத்து பெரியம்மை மணியம்மை முடித்துவைத்தார். இப்படி தொடக்கம் முதலே இந்த இயக்கத்திற்காக மகளிர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் வழங்கிவருகிறார்.
சுயமரியாதை திருமணங்கள் செல்லும் எனும் சட்டத்தை கொண்டுவந்தார் அண்ணா. கருணாநிதிதான் முதல்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு பணி வழங்கினார். அரசு தொடக்கப்பள்ளிகளில் பெண்கள் மட்டும்தான் ஆசிரியராக இருக்கவேண்டும் எனும் திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி.

'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதி ஆட்சியில். அதை 50 சதவிதமாக உயர்த்தியது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில். ஸ்டாலின் முதலில் போட்ட கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இந்த நான்கரை வருடத்தில் 860 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதுபோல காலை உணவுத்திட்டம். 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். பெண்களுக்கு மகளிர் உதவித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000. இதுபோன்று மகளிருக்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்துவருகிறார். இவை அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான். 2.0வில் மேலும் பல திட்டங்களை முதலமைச்சர் கொடுப்பார்.
ஆனால் இந்த வளர்ச்சி பிடிக்காத மத்திய அரசு பல்வேறு வகையில் தொல்லைகளை கொடுக்கின்றனர். கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளில் பாட்சா எப்போதும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்கள் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என எத்தனை பேரை கொண்டுவந்தாலும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். 2026 தேர்தல் மீண்டும் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் விரட்டி அடிக்கும் தேர்தல். 7வது முறை மீண்டும் கழகம் ஆட்சி அமைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்க நீங்கள் உழைக்க வேண்டும்' என தெரிவித்தார்.
- அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது.
- இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞர் அணி யின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (23-ந்தேதி செவ் வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பா ளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூந்தமல்லி மின்சார பேருந்து பணிமனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம்ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், மாநகர் போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குனர் இராம.சுந்தர பாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட னர்.
- உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
- தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார்.
சென்னையில் JioHotstar South Unbound நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"எப்போதும் சொல்வதுதான். உள்ளடக்கம்தான் இப்போது ராஜா. உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.
தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என தெரிவித்தார்.
- அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.
இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.
- இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
- பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இசைஞானிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- அட்டவணையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன வெளியிட்டுள்ளார்.
- சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது.
மேலும், இப்பபோட்டி சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். 2026-ல் நடைபெறவுள்ள ஆக்கி உலகக்கோப்பை இந்தியா வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
- குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.
தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகளை கண்காணிக்க சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ‘தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எல்லாவற்றிலும் சாதக பாதகம் இருக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் பாதகம் மட்டுமே உள்ளது.
கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாடு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை வீழ்த்த வேண்டும்.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று கூறுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
தேசிய கல்விக்கொள்கை நமது மாணவர்களின் படிப்பை சீரழிக்கும் திட்டம்.
எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடி தமிழ்நாடு வென்றுள்ளது. அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.239.41 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
- திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
- திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






