search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Bus"

    • பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது.
    • 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது.

    இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி பஸ் நிலையம் மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.

    ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

    • எலெக்ட்ரிக் பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் தற்போது 12 இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலை பஸ் நிலையத்தில் இருந்து மலை பகுதி முழுவதும் பஸ் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றி இறக்கி செல்கின்றன. தற்போது இயக்கப்படும் பஸ்கள் டீசலில் இயங்கி வருகின்றன.

    திருமலையில் அதிகாலை மாசு ஏற்படுவதை குறைக்க தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பைகள் பிளாஸ்டிக் அல்லாத காகிதங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள மேகா என்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் கிரீன்டெக் நிறுவனம் திருமலையில் இயக்குவதற்காக 10 எலெக்ட்ரிக் பஸ்களை தயாரித்துள்ளது. இதில் 5 பஸ்கள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் 5 பஸ்கள் கொண்டுவரப்பட உள்ளது. இந்த பஸ்கள் 25 பேர் அமரக்கூடிய வகையிலும் 25 பேர் நின்று பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புறமும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதனால் திருமலைக்கு புதிதாக வரும் பக்தர்கள் தங்கள் இறங்க வேண்டிய இடத்தை கண்டறிந்து இறங்கிக்கொள்ள இந்த வசதி உதவியாக இருக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற 27-ந்தேதி காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபாரெட்டி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த இலவச பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 58,955 பேர் தரிசனம் செய்தனர். 25,113 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும்.

    திருமலை:

    மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் டி.செங்கல் ரெட்டி கூறியதாவது:-

    புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைந்தது. மொத்தம் 100 பஸ்கள் வரும். மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு இடையே 64 பஸ்கள், திருப்பதியில் இருந்து நெல்லூர், மதனப்பள்ளி, கடப்பா பகுதிக்கு 12 பஸ்கள் இயக்கப்படும்.

    ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மலைச் சாலையில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும். வருகிற 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார். அப்போது அவர் மின்சார பஸ்களை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை.

    தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் இந்த மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னை போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ் படிக்கட்டின் உயரத்தை தரையில் இருந்து 400 மில்லி மீட்டர் உயரத்துக்கும் குறைவாக வைத்திருக்குமாறு டெண்டர் எடுப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    • இதனால் பயணிகள் எளிதாக பஸ்களில் ஏறவோ, இறங்கவோ முடியும். மேலும் சக்கர நாற்காலியை ஏற்றிச்செல்லும் வகையில் சாய்வு தளம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரில் புதிதாக 100 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்குவதற்காக இந்த 100 மின்சார பஸ்களை வாங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

    ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் இந்த பஸ்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் குளிர்சாதன வசதி கொண்டவையாக இருக்கும். இதில் 36 பேர் அமரும் வசதி கொண்டது. சக்கர நாற்காலியில் சென்று அமரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இருக்கையும் இதில் அடங்கும்.

    பஸ் படிக்கட்டின் உயரத்தை தரையில் இருந்து 400 மில்லி மீட்டர் உயரத்துக்கும் குறைவாக வைத்திருக்குமாறு டெண்டர் எடுப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் பயணிகள் எளிதாக பஸ்களில் ஏறவோ, இறங்கவோ முடியும். மேலும் சக்கர நாற்காலியை ஏற்றிச்செல்லும் வகையில் சாய்வு தளம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களுக்கு அடுத்த படியாக சென்னை நகரம் தான் கடைசியாக மின்சார வாகன பயன்பாட்டில் இணைந்துள்ளது. மாநில அரசு இந்த செயல்முறையை விரைவுபடுத்தும் என நம்புகிறோம்' என்றார்.

    இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு முதல் சென்னையில் மின்சார பஸ்கள் இயங்க தொடங்கும். முதலில் 100 பஸ்கள் வாங்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்குவதற்கு 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 400 பஸ்கள் வாங்கப்படும்.

    மின்சார பஸ்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு மாடல்களை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. 2 வகைகளில் சார்ஜிங் வசதி இருக்கும்.

    முதல் வகையில் ஒரே இரவில் சார்ஜிங் செய்யப்படும். மற்றொரு வகையில் ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் 10 முதல் 30 நிமிடங்கள் சார்ஜிங் செய்யப்படும். இதில் டெண்டர் மதிப்பீட்டுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்' என்றார்.

    சீனாவில் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 250 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பேட்டரியில் இயங்குகிறது. #ElectricBus



    சீனாவைச் சேர்ந்த பி.ஒய்.டி. ஆட்டோ எனும் நிறுவனம் உலகின் மிகவும் நீளமான பேட்டரி பேருந்தை உருவாக்கி இருக்கிறது. கே12ஏ என அழைக்கப்படும் இந்த பேருந்து 88 அடிநீளம் (27.5 மீட்டர்) கொண்டிருக்கிறது. இந்த பேருந்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. 

    இதில் ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கலாம். இது முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த பேருந்தில் 2 சக்கரங்கள் சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி வசதிகள் உள்ளன. 4 சக்கர சுழற்சி வசதி கொண்ட முதல் பேட்டரி பேருந்து என்ற பெருமையை கே12ஏ பெற்றிருக்கிறது. இதை ஏ.சி. மற்றும் டி.சி. ஆகிய முறையில் சார்ஜ் செய்யலாம். 



    இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது. இந்த பேருந்து ஓராண்டு இயக்கப்பட்டால் இதன் மூலம் 193 டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும். இது 8,900 மரங்கள் நடுவதற்கு சமமானதாகும் என பேருந்தை உருவாக்கிய பி.ஒய்.டி. நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக பி.ஒய்.டி. நிறுவனம் 2010, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் பேட்டரி பேருந்துகளை அறிமுகம் செய்திருக்கிறது.
    சென்னையில் பேட்டரி பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக லண்டனில் உள்ள பேட்டரி பேருந்து பணிமனையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
    சென்னை:

    சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் (மின்சார பேருந்து) இயக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பேட்டரி பேருந்து சேவைகள் தொடர்பாக, லண்டனில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் சி-40 நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் பேட்டரி பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், லண்டன் சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டரி பேருந்துகளை இயக்கும் பணிமனைக்கு சென்று பார்வையிட்டார். பேட்டரி பேருந்து போக்குவரத்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதுபற்றி அறிந்துகொண்டார். போக்குவரத்து துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
    செல்போன் சார்ஜர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நவீன பஸ்சை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்தபிறகு அரசு நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

    கேரள அரசு போக்குவரத்துக்கழகமும் தற்போது நவீன மயமாகி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களும் போக்குவரத்துத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பேட்டரியில் இயங்கும் நவீன பஸ்சை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த பஸ் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் உருவாகி உள்ளது. 5 மணிநேரம் மின்சாரம் மூலம் இந்த பஸ்சின் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்சை இயக்க முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த பஸ்சில் பயணிகள் நெருக்கடி இன்றி பயணம் செய்ய வசதியாக 35 சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. செல்போன் சார்ஜ் செய்யவும் ஒவ்வொரு இருக்கை அருகேயும் அதற்கான மின்சாதன வசதியும் அமைந்துள்ளது.

    வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என்று பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த பஸ்சில் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் பஸ்சில் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி இந்த பஸ்சில் உண்டு.

    இந்த நவீன பஸ் இன்று சோதனை முறையில் இயக்கப்படுகிறது. படிப்படியாக 300 நவீன பஸ்களை மாநிலம் முழுவதும் இயக்க அரசு திட்டமிட்டு உள்ளது. #Kerala #ElectricBus
    ×