என் மலர்

  நீங்கள் தேடியது "Passenger Vehicle"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தியது.
  • தற்போது பயணிகள் வாகன விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை 0.55 சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். ஒவ்வொரு மாடலின் விலை எந்த அளவுக்கு மாறும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


  "உற்பத்தி செலவீனங்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனினும், தொடர்ச்சியான பாதிப்புகளால், விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

  இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் கடந்த மாதம் மட்டும் 45 ஆயிரத்து 197 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இவற்றில் 3 ஆயிரத்து 507 யூனிட்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ், டாடா நெக்சான், டாடா பன்ச், டாடா ஹேரியர் மற்றும் டாடா சஃபாரி போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவில் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 250 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக பேட்டரியில் இயங்குகிறது. #ElectricBus  சீனாவைச் சேர்ந்த பி.ஒய்.டி. ஆட்டோ எனும் நிறுவனம் உலகின் மிகவும் நீளமான பேட்டரி பேருந்தை உருவாக்கி இருக்கிறது. கே12ஏ என அழைக்கப்படும் இந்த பேருந்து 88 அடிநீளம் (27.5 மீட்டர்) கொண்டிருக்கிறது. இந்த பேருந்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. 

  இதில் ஒரே சமயத்தில் 250 பேர் பயணிக்கலாம். இது முற்றிலும் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. இந்த பேருந்தில் 2 சக்கரங்கள் சுழற்சி மற்றும் 4 சக்கர சுழற்சி வசதிகள் உள்ளன. 4 சக்கர சுழற்சி வசதி கொண்ட முதல் பேட்டரி பேருந்து என்ற பெருமையை கே12ஏ பெற்றிருக்கிறது. இதை ஏ.சி. மற்றும் டி.சி. ஆகிய முறையில் சார்ஜ் செய்யலாம்.   இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது. இந்த பேருந்து ஓராண்டு இயக்கப்பட்டால் இதன் மூலம் 193 டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும். இது 8,900 மரங்கள் நடுவதற்கு சமமானதாகும் என பேருந்தை உருவாக்கிய பி.ஒய்.டி. நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

  முன்னதாக பி.ஒய்.டி. நிறுவனம் 2010, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் பேட்டரி பேருந்துகளை அறிமுகம் செய்திருக்கிறது.
  ×