என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jaganmohan reddy"
- முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
- சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது.
இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்.டி.ஆர். உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்காணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.
இந்நிலையில், முதல்-மந்திரி ஜெகன்மோகன் திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அலர்ட் சிஸ்டம் ஏன் செயல்படவில்லை, சிக்னலில்லிங் ஏன் தோல்வியடைந்தது.
தகவல் தொடர்பு அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆதரவு, பிரார்த்தனைகளும் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
- ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாணை ஒப்பிட முடியாது.
- பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.
எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.
கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும்.
பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார்.
சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
- தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
ஐதராபாத்:
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்து பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
இந்த வாரம் சோனியா காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.
- கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.
- நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.
திருப்பதி:
ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி அடுத்த வெங்கடகிரியில் ஒய்.எஸ்.ஆர். நேதன்னா நேஸ்தம் திட்ட 5-வது தவணை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வரவும், அவர்களுக்கு உதவவும் ஒய்.எஸ்.ஆர்.நேதன்னா என்ற திட்டத்தில் மூலம் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 80 ஆயிரத்து 686 கைத்தறி நெசவாளர்களுக்கு கணக்கில் நேரடியாக ரூ.193.64 கோடி டெபாசிட் செய்யப்படும்.
ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 4 திருமணங்கள் செய்து கொண்டவர். அவர்அரசை விமர்சிக்க தகுதியற்றவர். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார்.
கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.
சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகன்தான் பவன் கல்யாண். பாலகிருஷ்ணாவின் மருமகனும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.
அவர்கள் அரசைபற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.
- ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது அரசின் கண்மூடித்தனமான முடிவுகளுக்கு ஆந்திரா பலியாகி உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி தனது திறமையின்மை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையால் போலவரம் திட்டத்தையும், அமராவதியையும் முற்றிலுமாக அழித்துவிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சவால்களையும் முறியடித்து, மக்கள் நலனுக்கான சொத்துக்களை உருவாக்கும்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்தார்கள். அதுபோல ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏன் மக்கள் ஒன்றிணைய முடியவில்லை.
சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.
"மக்களுக்காக இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," மாநிலத்தை பிரித்ததை விட, ஜெகன் அரசின் திறமையற்ற ஆட்சியால் மாநில மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"நான் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்".
தற்போது, தெலுங்கானாவின் தொலைதூரப் பகுதிகளில் கூட ஒரு ஏக்கருக்கு 50 கோடி ரூபாய், ஆந்திராவில் 10 ஏக்கருக்கு கூட இந்தத் தொகை கிடைப்பது மிகவும் கடினம் என்ற நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
- ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.
திருப்பதி:
ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:-
எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்ததாக தொழிலாளர்கள், டிரைவர்களுடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொண்டார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மதுபான ஆலை தொழிலில் தான் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து பெரிய தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வரிசையில் நிற்கிறார்கள்.
அதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பீலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
ஆனால், சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி நடப்பதை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றனர். ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.
அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இதற்காக மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
- தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா. ஒய் எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவராக உள்ளார்.
இவர் தெலுங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று கட்சியை பலப்படுத்தி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும். இதற்காக ஷர்மிளாவிடம் டி.கே. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவ்வாறு இணைக்கப்பட்டால் ஷர்மிளா தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
- சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
திருப்பதி:
திருப்பதி அடுத்த சிகுருவாடா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது :-
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
அவர் ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆந்திர மக்கள் இதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து 3 வாக்குறுதிகளையும், கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 2 வாக்குறுதிகளையும், பா.ஜ.க அளித்த ஒரு வாக்குறுதி என மொத்தம் 6 வாக்குறுதிகளை திருடி தற்போது அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.