search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar statue"

    • தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    ஐ .எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாதோப்பு ஆகிய 7 உட்கோட்டத்தில் 107 அம்பேத்கர் சிலை உள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
    • சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

    இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

    இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
    • அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி மெருகு நாகார்ஜுனா கூறுகையில்:-

    அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.

    2-வது கட்டமாக ரூ.106 கோடியில் அம்பேத்கர் சிலைக்கு வண்ணம் தீட்டுதல் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    இந்த சிலை வருகிற 19-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.
    • மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.

    அரசமைப்புச் சட்டத்தின் உயர்பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
    • பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்

    இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. இது மிகவும் உயரமான சிலை ஆகும். சிலை திறப்பு விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
    • புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான அன்னிய செலவானி பெற்று தருகின்ற மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டம் ஆகும்.

    தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள்.

    எந்திரங்கள் வந்த பிறகு பாதி பேர் வேலை இழந்துள்ளார்கள். எனவே வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்

    தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்கள் எந்த தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அதில் நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அரசு ஒதுக்கீடாக இருந்தாலும் அதனுடைய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.

    இதுபோன்று தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. அதே போன்று தமிழகத்திலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே இருந்த பாராளுமன்ற கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிலை அமையுமா? மேலும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், கட்டிட வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். மேலும் எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது கொள்கை ரிதியாக நியாயமானது.

    இந்திய குடியரசு கட்சியும் இதனை ஆதரிக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது இந்தியா முழுவதும் மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு நடக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில தலைமை நிர்வாகிகள் தன்ராஜ், கவுரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி-தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சட்ட மேதை அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே அவுட் போஸ்டில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், மண்டலத் தலைவர் வாசுகி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கவுன்சிலர் நந்தினி, திருப்பாலை ராம மூர்த்தி, வாடிப்பட்டி கார்த்திக், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட நிர்வாகி கள், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வேலுச்சாமி குழந்தைவேலு, அக்ரி.கணேசன், சின்னம்மா, ஒச்சுபாலு, மூவேந்திரன், சுதன், ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.-அ.தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவை தலைவர் வி.கே.முருகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை மேயர் ராஜு, பொருளாளர் வண்ணை சேகர், எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு காசி மணி, சஞ்சய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா ளர் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலா யுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கர லிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், டவுன் கூட்டுறவு வங்கித் தலைவர் பால் கண்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, சீனி முகம்மது சேட், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். இதில் பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர் சொக்க லிங்க குமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, அய்ப்பன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.-ம.தி.மு.க.

    தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் அவைத்தலைவர் மாடசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கொம்பையா பாண்டியன், துணைச் செயலாளர் சின்னத்துரை, நிர்வாகிகள் கலைவாணர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட செய லாளர் சீயோன் தங்க ராஜ் தலைமையில் நிர்வா கிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.ம.மு.க.-ச.ம.க.

    அ.ம.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம். ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆவின் அன்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் கண்ணன்,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் அழகேசன் தலைமை யிலும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலை மையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் முத்தையா ராமர் தலைமையிலும், நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.

    நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னதுரை தலை மையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை.
    • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவு செய்யவில்லை என கூறி நெல்லை சந்திப்பில் அம்பேத்கர் சிலை முன்பு மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்து பலவே சம், மாவட்ட செயலாளர் நாகராஜன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்க ளுக்காக ஒதுக்கப்படும் அரசு நிதியை அவர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
    • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

    சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.

    பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.

    அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

    வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

    ×