என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swachh Bharat"

    • சென்னை மாநகராட்சி கழிப்பறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய ₹1,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட பிறகும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், மீண்டும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ரூ.1,000 கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது

    சென்னை நகரத்தில் 1,260 இடங்களில் 10,000 பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கழிப்பறைகளை 9 ஆண்டுகள் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது தவிர, மொபைல் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் மற்றும் சிங்காரா சென்னையின் 'ஒப்பனை கழிப்பறைகள்' ஆகியவற்றைக் கட்டவும் பராமரிக்கவும் சுமார் 50 கோடி செலவிட்டுள்ளது.

    ரூ.1000 கோடி செலவு செய்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தான் உள்ளது. அப்படியெனில் இந்த 1000 கோடி ரூபாய் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.

    தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

    அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகளை கண்காணிக்க சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

    குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
    • 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்

    மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.

    சுவாச் பாரத் திட்டத்தின் வெற்றியால் இந்திய கிராமங்களில் ஓவியங்களுடன் கூடிய கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat
    சண்டிகர்:

    பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ‘திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை எப்படி பெற்றது, இதை எப்படியெல்லாம் நைஜீரியா நாட்டில் செயல்படுத்தலாம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள நமது விருந்தினர்களை நான் வரவேற்கிறேன்.

    கடந்த ஒரு வாரமாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார்.



    மேலும், ‘ஐரோப்பாவில் உள்ள ஒரு இடத்தில் வீடுகளின் முகப்பில் அழகிய சுவரோவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துச் செல்கின்றனர்.

    அதேபோல், அநேகமாக இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தின் கழிப்பறைகளின் தூய்மையையும் அவற்றில் உள்ள அழகிய ஓவியங்களையும் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இங்குவரும் ஒரு காலம் ஒருநாள் வரும்’ என மோடி நம்பிக்கை தெரிவித்தார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat 
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்' மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். #SwachhBharat #GaneshVenkatraman
    அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

    இந்த நிலையில், ஹார்பிக்கின் `சொச் பாரத்' பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக கணேஷ் வெங்கட்ராமன்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்ஷய் குமாருடன், கணேஷ் வெங்கட்ராமன் தற்போது கைகோர்த்துள்ளார். 

    அக்ஷய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் சம்பந்தப்பட்ட விளம்பர படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் அது பற்றி கூறும்போது, “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும், அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம். 



    தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் `ஹார்பிக்' நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும் “ என்றார். 

    தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் `மை ஸ்டோரி' படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்திலும் கணேஷ் வெங்கடராம் நடித்துள்ளார். #SwachhBharat #GaneshVenkatraman #AkshayKumar

    குஜராத் மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனைப் படைத்துள்ளனர். #SwachhBharat
    அகமதாபாத்:

    நாட்டில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.



    இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 740 பேர் துடைப்பத்துடன் ஒரே இடத்தில் நடமாடினர். இது சாதனையாக கருதப்படுகிறது. #SwachhBharat

    ×