என் மலர்

  நீங்கள் தேடியது "Clean India"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துாய்மை இந்தியா திட்ட உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
  • கரூர் ரயில்வே நிலையத்தில் ஏற்பாடு செய்தனர்

  கரூர்:

  கரூர் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜராஜன் தலைமையில், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, பயணிகளுக்கு துாய்மை திட்டம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஸ்டேஷன் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு, ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், முதன்மை சுகாதார ஆய் வாளர் சாந்தி, ரயில்வே பாதுகாப்புப் படை 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மிகவும் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
  புதுடெல்லி:

  தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது.  4,320 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார்.

  இதில், நாட்டின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதற்கான விருதை ஜனாதிபதி வழங்கினார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக தூய்மைக்கான விருதை பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றவாது இடத்தையும் பிடித்தது.

  சத்தீஸ்கர் மாநிலத்திற்கு விருது

  100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் மத்திய பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் கங்கை கரையோர நகரங்களில் தூய்மையான நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  புதுச்சேரி:

  புதுவையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உள்ள பகுதியில் கடற்கரையை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

  பின்னர் புதுவை மாநிலத்தை தூய்மையாக வைப்போம் என பதாகையில் எழுதி முதல் அமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.

  பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

  கடல் வளத்தை பேணி காப்பது நமது கடமை. நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதிகளவில் சுற்றுலா தளங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

  இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
  கோவை:

  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

  இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

  இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

  தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

  உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

  தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


  இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

  குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

  தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

  இவ்வாறு சத்குரு கூறினார்.

  பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதிலும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, தூய்மையான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே இந்த திட்டத்தின் இலக்கு என்றும், தூய்மையான இந்தியா உருவாக நாம் அனைவரும் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

  ‘இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான தூதுவர்கள், இந்தியாவில் நேர்மறை மாற்றத்தின் முன்னணியில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.  4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

  மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்' மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். #SwachhBharat #GaneshVenkatraman
  அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

  இந்த நிலையில், ஹார்பிக்கின் `சொச் பாரத்' பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக கணேஷ் வெங்கட்ராமன்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்ஷய் குமாருடன், கணேஷ் வெங்கட்ராமன் தற்போது கைகோர்த்துள்ளார். 

  அக்ஷய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் சம்பந்தப்பட்ட விளம்பர படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் அது பற்றி கூறும்போது, “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும், அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.   தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் `ஹார்பிக்' நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும் “ என்றார். 

  தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் `மை ஸ்டோரி' படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்திலும் கணேஷ் வெங்கடராம் நடித்துள்ளார். #SwachhBharat #GaneshVenkatraman #AkshayKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிச்சை எடுத்து சேமித்த பணத்தின் மூலம் கழிவறை கட்டிய தம்பதியரை பிகார் மாநில மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக நியமனம் செய்துள்ளது. #CleanIndia
  பாட்னா :

  பிகார் மாநிலம், மங்கேர் மாவட்டத்தில் உள்ள ஹெம்ஜாபூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர்களான மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் பணவசதி இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை விரும்பாமல் தனியாக கழிவறை ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தனர்.

  ஆனால், பணம் இல்லாத காரணத்தினால் தம்பதியர் இருவரும் பிச்சை எடுத்து கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினர். இவ்வாறு சேமித்த பணத்தில் மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் அவர்களது குடிசை வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டியுள்ளனர்.

  இந்த செயலைக் கண்டு வியந்த மங்கேர் மாவட்ட நிர்வாகம் பிச்சைக்கார தம்பதியரை அம்மாவட்ட தூய்மை இந்தியா திட்டதிற்கு தூதர்களாக நியமனம் செய்து அறிவித்தது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி கழிவறை கட்டுவோருக்கு அரசு வழங்கும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. #CleanIndia
  ×