search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மையே சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    தூய்மையே சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதிலும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, தூய்மையான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே இந்த திட்டத்தின் இலக்கு என்றும், தூய்மையான இந்தியா உருவாக நாம் அனைவரும் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    ‘இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான தூதுவர்கள், இந்தியாவில் நேர்மறை மாற்றத்தின் முன்னணியில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.  4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

    மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
    Next Story
    ×