search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaggi Vasudev"

    • ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் தனது வாட்ஸ்அப்பில் டி.பி.யாக கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் ஆதியோகி சிலையை வைத்திருந்தான். மேலும் அதில் பிரேம்ராஜ் என்ற பெயரையும் பதிவிட்டிருந்தான்.

    இதனால் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றானா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதியோகி சிலையை டிபியாக வைத்துள்ளார். அவர் ஆதியோகி மீதான பற்றின் காரணமாக வைக்கவில்லை. அவருடைய மத அடையாளத்தை மறைப்பதற்காகவே ஆதியோகி புகைப்படத்தை டி.பி.யாக வைத்துள்ளார்.

    மிரட்டல்கள் என்பது எனக்கு புதிது அல்ல. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
    கோவை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

    தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


    இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
    மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.

    கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JaggiVasudev
    ஸ்டெர்லைட் ஆலைக்கு தான் ஆதரவளிக்கவில்லை என்றும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் விளக்கம் அளித்துள்ளார். #JaggiVasudev #Sterlite
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சத்குரு ஜகி வாசுதேவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளை சுட்டிக்காட்டி ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு தெரிவித்த கருத்துக்கள் சில ஊடகங்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பம் ஒன்று உருவாகி வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவத்தில் 13 பேரின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்காமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்கியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சத்குரு அவர்கள் குரல் கொடுப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பார்வை முற்றிலும் தவறானது.

    துப்பாக்கி சூடு நடந்த மறுநாளே குரல் கொடுத்தார் சத்குரு. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மே 22-ம் தேதி நடைபெற்றது. அதன் மறுநாளான மே 23-ம் தேதி கோவை விமான நிலையத்தில் சத்குரு, தந்தி டி.வி. நிருபரின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    அந்த பதிலில், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டு மக்களை நாமே கொல்லக்கூடாது. இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டறிய வேண்டும். இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது. சாமானிய மக்களும் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று சத்குரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், மக்களின் பாதிப்புகளை உணராமல் சத்குரு ‘ஸ்டெர்லைட் ஆலை’-க்கு ஆதரவாக பேசி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சத்குரு கருத்து தெரிவித்துள்ளார்.



    ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு தெரிவித்த கருத்துக்களின் ஒட்டுமொத்த சாராம்சம்:

    ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நம் மக்கள் கொல்லபட்டுள்ளனர், இனி ஒரு சம்பவம் இவ்வாறு நிகழக்கூடாது. அந்த சம்பவத்தில் சாமானிய மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கருதவில்லை. அரசியல் ஆசை கொண்ட சில குழுக்கள் மக்களை பலிகடா ஆக்கியுள்ளதாகவே கருதுகிறேன்.  நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள். பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம். இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JaggiVasudev #Sterlite
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    சமூக வலை தளங்களில் வி.ஐ.பி.க்களின் உடல் பிட்னஸ் வீடியோக்கள் தான் தற்போது ஹாட்டாபிக்காக உள்ளது.

    மத்திய மந்திரி ராஜ்வர்தன் ரதோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதோடு, கிரிக்கெட் வீரர்கள் கோலி, தோனி ஆகியோர் தங்களது பிட்னசை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். இதை ஏற்று கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். மேலும், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தனது உடல் பிட்னசை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி சவால் விடுத்தார். மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

    நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

    நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    சத்குருவின் இந்த சவால் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JaggiVasudev #EdappadiPalanisamy #OPanneerSelvam #MKStalin
    ×