என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Yoga Day"

    • ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார்.
    • பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தை சேர்ந்த தோண்டிராம் போஸ்லே ஒரு பள்ளியின் ஆசிரியராக பணிபுரிகிறார். தோண்டிராமின் மகள் சாதனா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 92.60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என தந்தை முனைப்பு காட்டி வந்துள்ளார்.

    எனவே 12 ஆம் வகுப்போடு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை தேர்வுக்கும் சாதனா தயாராகி வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.

    இதனால், தோண்டிராம் மிகவும் கோபமடைந்தார். கடந்த சனிக்கிழமை இரவு மகளை திட்டியுள்ளார். மகள் எதிர்த்துப் பேசியதால் ஆத்திரம் தலைக்கேறிய தோண்டிராம், ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார். தாயுடன், சகோதரனும் தடுத்தும் அவர் தாக்குவதை நிறுத்தவில்லை.

    பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்தநாள் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அவர் வீடு திரும்பியபோது, தனது மகள் குளியலறையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். காயங்கள் காரணமாகவே அவரது உயிர் பிரிந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் தொண்டிராம் போஸ்லேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
    • உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்று யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    நாடு முழுவதும் ஈஷா சார்பில் நடைபெற்ற 2500-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில், 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர் உள்பட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த யோக வகுப்புகள், 11,000-க்கும் மேற்பட்ட யோக வீரா எனும் ஈஷா தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.

    கோவை ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43-வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

    மேலும் சென்னை ஐ ஐ டி (IIT) வளாகம் மற்றும் ஹெச் டி எப் சி வங்கி, ஐ பி எம் (IBM), கோத்ரேஜ் (Godrej) எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், L&T, மற்றும் எஸ் பேங்க் (Yes Bank) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

    அதே போன்று பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகியவற்றைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    மேலும் சில தனியார் நிறுவனங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் யோக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    சத்குருவின் யோகா தின செய்தியில், "யோகா என்பது, கட்டாயமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிமையாகாமல், விழிப்புணர்வுடன் கூடிய தேர்வுகளின் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் விழிப்புணர்வு பெற்று, அந்த கட்டாயத் தன்மையைக் கடந்து செல்லும்போது மட்டுமே, உங்கள் உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

    முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள புல்மேன் ஹோட்டலில் "மிராக்கிள் ஆஃப் மைண்ட்" 7 நிமிட தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இலவசமாக வழங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், சத்குருவால் வடிவமைக்கப்பட்ட எளிய, சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக மூட்டுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் 'யோக நமஸ்காரம்' எனும் பயிற்சி, உடல் மற்றும் உள்நிலையில் சமநிலை அதிகரிக்கும் 'நாடி சுத்தி' பயிற்சி மற்றும் மன அமைதி, தெளிவு, கவனத்தை மேம்படுத்தும் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டன.

    • யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது.
    • அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

    இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டந்தோறும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகியான நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் நடிகை நமீதா பேசியதாவது:-

    யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது. புதியது கிடையாது. 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

    என் குழந்தைகளிடம் நான் இன்றுவரை ஆங்கிலத்தில் பேசமாட்டேன். ஆனால் தமிழ், தெலுங்கு, குஜராத்தி உள்ளிட்ட தாய்மொழியில் தான் பேசுவேன். ஏனெனில் அவையே அவர்களின் தாய்மொழி. அதுதான் எனக்கு பெருமை. ஆங்கிலத்தை டி.வி.யிலோ, அல்லது வேறு எங்கேயாவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

    அவர்களுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது. சூப்பர் மேன் தெரியாது, ஆனால் ஜெய் அனுமான் தெரியும் என்றார். 



    • அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார்.
    • 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.

    சென்னை:

    வருகிற 21-ந்தேதியன்று கொண்டாடப்படும் 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார். 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.

    தமிழ்நாடு கவர்னர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் தவிர பிற பிரிவுகள் உள்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக https://events.annauniv.edu/ என்ற இணையவழி சேவையை தொடங்கி உள்ளது. யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
    • நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி உள்ளார்.

    சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. யோகா நிகழ்ச்சிக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் வருகிற 13 முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் 3 நாட்கள் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.

    இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறும்போது, 'யோகா தினத்துக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யோகாவை ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் அதை சீக்கிரம் செய்யுங்கள்' என்று கூறி உள்ளார்.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார்.
    • உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மத்திய, மாநில மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான படத்தை அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச யோகா தினமான இன்று விண்வெளி நிலையத்தில் யோகா பயிற்சி செய்து வருகிறேன். யோகா உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் கூர்மைபடுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு பிடித்த யோகாசனம் எது? என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.

    சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.

    தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    • 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி முதல் முறை காஷ்மீர் செல்கிறார்.

    ஸ்ரீநகர்:

    பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, 10-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர் என கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    3-வது முறை பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
    • காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.

    மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.

     இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் உள்ள வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.

    அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஹிசாரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

    காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்ய உள்ளனர்.

    • இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.
    • இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    நியூயார்க்:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்' என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

    ×