என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை
    X

    நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை

    • ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார்.
    • பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தை சேர்ந்த தோண்டிராம் போஸ்லே ஒரு பள்ளியின் ஆசிரியராக பணிபுரிகிறார். தோண்டிராமின் மகள் சாதனா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 92.60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என தந்தை முனைப்பு காட்டி வந்துள்ளார்.

    எனவே 12 ஆம் வகுப்போடு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை தேர்வுக்கும் சாதனா தயாராகி வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது.

    இதனால், தோண்டிராம் மிகவும் கோபமடைந்தார். கடந்த சனிக்கிழமை இரவு மகளை திட்டியுள்ளார். மகள் எதிர்த்துப் பேசியதால் ஆத்திரம் தலைக்கேறிய தோண்டிராம், ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து தனது மகளை மோசமாக அடித்தார். தாயுடன், சகோதரனும் தடுத்தும் அவர் தாக்குவதை நிறுத்தவில்லை.

    பின்னர் எதையும் பொருட்படுத்தாமல் அடுத்தநாள் தனது பள்ளியில் தனது பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அவர் வீடு திரும்பியபோது, தனது மகள் குளியலறையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். காயங்கள் காரணமாகவே அவரது உயிர் பிரிந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் தொண்டிராம் போஸ்லேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×