என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கவர்னர் மாளிகை
- அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார்.
- 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.
சென்னை:
வருகிற 21-ந்தேதியன்று கொண்டாடப்படும் 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டு இருக்கிறார். 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா.
தமிழ்நாடு கவர்னர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் தவிர பிற பிரிவுகள் உள்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக https://events.annauniv.edu/ என்ற இணையவழி சேவையை தொடங்கி உள்ளது. யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.






