யோகா வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யோகா வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
Published on

சர்வதேச யோகா தினமான நேற்றுமுன்தினம் (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தாங்கள் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

அந்த வகையில், பெண் ஒருவர், தான் செய்த யோகா தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பிரபலமான அர்ச்சனா மக்வானா என்பவர் பல வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்படி அவர் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவிலில் யோகா செய்த வீடியோவை பகிர்ந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் சீக்கிய சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து அர்ச்சனா மக்வானா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அர்ச்சனாவை பொற்கோவிலில் யோகா செய்ய அனுமதித்தது தொடர்பாக ஊழியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அர்ச்சனா மக்வானா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com