என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior Hockey"

    • அட்டவணையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன வெளியிட்டுள்ளார்.
    • சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது.

    மேலும், இப்பபோட்டி சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். 2026-ல் நடைபெறவுள்ள ஆக்கி உலகக்கோப்பை இந்தியா  வெல்லும்" என தெரிவித்துள்ளார்.

    8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. #JuniorHockey #India #Japan
    ஜோஹர் பாரு:

    6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.



    வெற்றிக்கான கோலை இந்திய அணி வீரர் மன்தீப் மோர் 42-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார். இந்திய அணி முந்தைய ஆட்டங்களில் மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 
    ×