என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாடு அரசுடன் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஜியோ ஹாட்ஸ்டார்!
    X

    தமிழ்நாடு அரசுடன் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஜியோ ஹாட்ஸ்டார்!

    • உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
    • தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார்.

    சென்னையில் JioHotstar South Unbound நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து திரைப்படங்கள், இணையத்தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.



    தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    "எப்போதும் சொல்வதுதான். உள்ளடக்கம்தான் இப்போது ராஜா. உள்ளடக்கம் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

    இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.

    தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என தெரிவித்தார்.

    Next Story
    ×